பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாமா.. நிபுணர்கள் கூறுவது என்ன..
அமெரிக்காவில் பரஸ்பர வரி அறிவிப்பை வெளியிட்ட அதிபர் டிரம்ப், உலக பங்குச்சந்தைகளை ஆட்டம் காண வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஐசிஐசிஐ புரோடென்சியல் பரஸ்பர நிதியின் தலைமை முதலீட்டு அதிகாரி நரேன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், அமெரிக்க அதிபர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நரேன் கேட்டுக்கொண்டார். திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும்போது, அதனை திரும்பப்பெறுதல் மிகவும் எளிமையாக இருக்கும் ஏனெனில் கொரோனா போன்ற காலகட்டத்தில் திடீர் சரிவு போல் இல்லாமல்,சந்தைகளை சீர்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். பங்குச்சந்தைகளில் எப்போது அச்சம் தலைவிரித்தாடுகிறதோ அதுதான் முதலீட்டுக்கு சிறந்த நேரம் என்றும், லார்ஜ் கேப் எனப்படும் பெரிய நிதிகளை கொண்ட நிதியில் முதலீடு செய்வது சிறந்தது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நிதி பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சிறப்பான இடத்திலேயே இருப்பதாக கூறிய அவர், கடந்த 18 மாதங்களாக பங்குகளின் மதிப்பு அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும். சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு பங்குகள் அதிக மதிப்பு கொண்டதாகவும் மாறிவிட்டதாக கூறியுள்ளார். ஒரே மாதிரி இல்லாமல், பிரித்து முதலீடு செய்வதும், தற்போதைய சந்தை சூழலை பார்க்கும்போதும், ஈக்விட்டி அடிப்படையிலான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் திட்டத்தில் முதலீடு செய்வதை அவர் வரவேற்றுள்ளார். சந்தை திருத்தங்களை மேற்கொள்ளும்போது பரஸ்பர நிதியில் லார்ஜ் கேப் எனப்படும் பெரிய நிதி திட்டங்களிலும், ஃபிளெக்சி கேப் மற்றும் மதிப்பு சார்ந்த அணுகுமுறை இருப்பது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
