தப்பு கணக்கு காட்டுனியா??? கேள்வி கேட்கும் மத்திய அரசு!!!
மோரிஸ் கராஜ் என்ற கார் தயாரிப்பு நிறுவனம் பிரிட்டனை அடிப்படையாக கொண்டு இயங்கிய நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு இதனை சீனாவின் சியாக் மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றி அதே ஆண்டில் இந்தியாவில் கார்களை விற்கத் தொடங்கியது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் காலூன்றிய தருணத்தில் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு தாக்கல் செய்தது.இதுகுறித்து மத்திய அமைச்சரவையின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவுஆய்வு மேற்கொண்டதுடன், குறிப்பிட்ட காலகட்டத்தில் எப்படி சரிவு ஏற்பட்டது. சீன நிறுவனம் இந்தியாவில் வர்த்தகம் மேற்கொண்டாலும் , சீனர்களை எப்படி இயக்குநர்களாக நியமிக்க முடிந்தது போன்ற கேள்விகள் மோரிஸ் கராஜ் நிறுவனத்திடம் எழுப்பப்பட்டது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மோரிஸ் கராஜ் நிறுவனம், இந்திய விதிகளின் படியே தாங்கள் நடந்து கொள்வதாகவும், எந்த விதிகளையும் மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனங்களே தடுமாறிய நிலையில் ,அறிமுக ஆண்டில் வர்த்தகம் சரிந்து நஷ்டம் ஏற்பட்டதாகவும் மோரிஸ் கராஜ் இந்தியா மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கியுள்ளது.
முதலில் சில நாட்கள் வியாபாரம் சூடுபிடிக்காமல் இருந்தது. இந்த நிலையில் லாபம் கிடைக்கத் தொடங்கியதும்,மேலும் உற்பத்தியை அதிகப்படுத்த முதலீட்டாளர்களை அனுகியதாகவும், சீனர்கள் முதலீடு செய்ததாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.வரி ஏய்ப்பு செய்த புகாரில் சீன நிறுவனங்களான ஓப்போ,விவோ,ஜியோமி ஆகிய நிறுவனங்களுக்கு ஏற்கனவே இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் 4வதாக மோரிஸ் கராஜ் நிறுவனத்துக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.