பங்குச்சந்தையில் லேசான சரிவு
ஜனவரி 16 ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199 புள்ளிகள் குறைந்து 73 ஆயிரத்து 128 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.இதேபோல் தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65புள்ளிகள் குறைந்து 22,032 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. உலோகம் எரிவாயு மற்றும் எண்ணெய் துறை பங்குகள் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. ஆற்றல்துறை, சுகாதாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 1.5விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தையில் BPCL, Tata Steel, Titan Company, ITC, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. இதேநேரம்Divis Laboratories, HCL Technologies, Wipro, NTPC, SBI Life Insurance உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. Aster DM Healthcare, Capri Global, Dredging Corporation, IOC, IRFC, ITI, JM Financial, LIC of India, MOIL, PNB Housing Finance, PNC Infratech, Prataap Snacks, South Indian Bank, Yes Bank உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் 52 வார உச்ச விலையை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 46800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 5850 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை 30 காசுகள் விலை குறைந்து 78ரூபாயாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை 300 ரூபாய் விலை குறைந்து 78 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனிக்க வேண்டும்