ரொம்ப பெருமையா இருக்கு!!!! வாழ்த்துக்கள் மாப்பிள்ளை!!!!
பிரிட்டனில் கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்த நிலை,விலைவாசி உயர்வு உள்ளது
இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பொருட்களின் விலைகளும்
கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வரி வசூலிப்பதில் அரசாங்கத்துக்கு பெரிய சிக்கல் உள்ளது
இந்த நிலையில் அண்மையில் அந்நாட்டின் புதிய பிரதமராக டோரி கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ், ரிஷி சுனக் இடையே
கடுமையான போட்டி நிலவியது. எனினும் அதிக வாக்குகள் பெற்று லிஸ் டிரஸ் வென்றார்.
எனினும் 45 நாட்கள் மட்டுமே அவரின் ஆட்சி நீடித்தது.
கடும் விமர்சனத்துக்கு ஆளான லிஸ் டிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு அண்மையில் பதவி விலகினார். இந்த
சூழலில் போட்டியில் இருந்த ரிஷி சுனக் ஆளுங்கட்சியின் எம்பிகளின் ஏகோபித்த ஆதரவால் வெற்றி பெற்று
பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நாராயண மூர்த்தியின் சொந்த மருமகனான ரிஷி சுனக்குக்கு
நாராயண மூர்த்தி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமராக தேர்வாகியுள்ளதன் மூலம் பெருமை
சேர்த்திருப்பதாகவும் , அனைத்திலும் வெற்றி தொடர வேண்டும் என்றும் நாராயண மூர்த்தி வாழ்த்தியுள்ளார்.
பிரிட்டன் மக்களுக்காக அனைத்து நல்லதையும் ரிஷி செய்வார் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் ரிஷி பிரிட்டனில் பிறந்தவராவார். பிரிட்டன் வரலாற்றில்
ஆங்கிலேயர் அல்லாத ஒருவர் பிரதமராகியுள்ளதால் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.