சாரி… தெரியாம சொல்லிட்டோம்!!!
மூடிஸ் என்ற நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பொருளாதார நிலையை மிகச்சரியாக கணித்து மக்களின் திறனை பிரதிபலிக்கிறது. இந்த நிலையில் 2022-ல் 7 புள்ளி 7 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, உண்மையில் 7 %ஆக தான் இருக்கிறது என்று மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் 8.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டதை திருத்தி 7.7%ஆக குறையும் என்று செப்டம்பர் மாதம் மூடீஸ் தெரிவித்திருந்தது. அதிகரிக்கும் கடன் வட்டி விகிதம் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்தை குறைக்கும் முக்கிய காரணிகளாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023-ல் வளர்ச்சி 4.8%ஆக இருக்கும் என்று கூறியுள்ள மூடிஸ், 2024-ல் 6.4 % ஆக உயரும் என்றும் கணித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் மந்த நிலைக்கு மத்தியில் இந்தியாவின் மதிப்பு குறைந்திருப்பது பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் நிதி மதிப்பு மற்றும் கொள்கை கூட்டத்தை தொடர்ந்து 190 அடிப்படை புள்ளிகள் கடன் விகிதத்தில் உயர்த்துவதால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 75 அடிப்படை புள்ளிகளை அண்மையில் உயர்த்தியுள்ளது.