ஸ்டார் ஹெல்த் தரவு கசிவு அப்டேட்..
இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டில் தனித்துவம் பெற்ற தனியார் நிறுவனமாக திகழ்வது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 3 கோடியே 10லட்சம் பேரின் தரவுகள் அண்மையில் டெலிகிராம் செயலியில் கசிந்ததாக தகவல் வெளியானது. இதில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், செல்போன் எண்கள், மருத்துவ தகவல்கள், அடையாளங்கள் உள்ளிட்ட தனித்தகவல்கள் இடம்பிடித்திருந்தன. இந்த தகவல் கசிவு விவகாரம் சைபர் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது. நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே தகவலை அளுத்ததாக ஹேக்கர் கூறினாலும், காப்பீட்டு நுட்ப நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் விவரம் அளிக்கும்போதுதான் இந்த கசிவு நடந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அடையாளங்கள்திருட்டு, நிதியிழப்பு அபாயங்களும் உள்ளதால் , இது போன்ற சம்பவங்கள் வருங்காலங்களில் நடக்காதபடி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் வலுத்துள்ளது. தகவல் கசிவால் IRDAI அமைப்பின் நடவடிக்கைக்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ ஆளாக நேரிடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த அமைப்பு விசாரணையையும் நடத்த இருக்கிறது. விசாரணை தொடங்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை ஸ்டார் நிறுவனம் எடுக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.