6லட்சம் கோடி ரூபாய் இழந்த முதலீட்டாளர்கள்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடுகளை பங்குச்சந்தைகளில் செய்து வருகின்றனர். இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் சரிவு காணப்பட்டது. உள்கட்டமைப்பு, ஆற்றல், உலோகத்துறை, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிவை கண்டன. வணிகத்தின்போது பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. வர்த்தக நேர முடிவில் இந்த தொகை 6லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல், நிறுவனங்களின் மோசமான இரண்டாம் காலாண்டு முடிவுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று பணமாக மாற்றுவது உள்ளிட்டவையும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு அச்சம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட 5முக்கிய காரணிகள் பங்குச்சந்தைகளில் பெரிய சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவை தவிர்த்து இந்தியாவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை சீனா பக்கம் திருப்பியதும் மிகமுக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.