3லட்சம் கோடி நஷ்டம்..
செப்டம்பரின் கடைசி வர்த்தக நாளில் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 3லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு நேரிட்டது. சென்செக்ஸ் 1250 புள்ளிகளுக்கும் மேலாகவும், நிஃப்டி 360 புள்ளிகளுக்கும் மேலாகவும் சரிந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை பங்குகள் வீழ்ந்ததன் காரணமாகவே இந்திய சந்தைகளில் சரிவு காணப்பட்டது. சந்தை மூலதன அளவுகள் 3.55லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்து 474.38லட்சம் கோடி ரூபாயாக குறைந்தன. Reliance Industries, ICICI Bank, HDFC Bank,Axis Bank, Infosys, M&M, Bharti Airtel, SBI, ITC ஆகிய நிறுவனங்களின் இழப்புகளால் சந்தையில் பெரிய அடி காணப்பட்டது. சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக சிறப்பு திட்டத்தை சீன அரசு அறிவித்தது. இதன் காரணமாக சீன பங்குச்சந்தைகளின் பக்கம் முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பினர். கச்சா எண்ணெய் விலை உயர்வு, லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் அடுத்த நகர்வு, ஜப்பானின் ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டியை உயர்த்துவது உள்ளிட்ட காரணங்களால் இந்திய சந்தைகளில் பெரிய அளவு சரிவு காணப்பட்டது. செப்டம்பர் கடைசி நாளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினாலும் செப்டம்பரில் மட்டும் 57,000 கோடிரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் முதலீடு செய்திருக்கின்றனர். இதுவலுவான நிலையாகவே பார்க்கப்படுகிறது.