பங்குச்சந்தைகளில் ரத்த ஆறு..
இந்திய பங்குச்சந்தைகளில் பிப்ரவரி 12 ஆம் தேதி மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70,922 புள்ளிகளாக சரிந்தது. ஒரே நாளில் 523 புள்ளிகள் சரிவை அந்த பங்குச்சந்தை பதிவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166 புள்ளிகள் சரிந்து 21,616 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் அதிகபட்சமாக கோல் இந்தியா,ஹீரோ மோட்டோ கார்ப்,BPCL,ONGC,NTPC ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. அதேபோல் டாக்டர் ரெட்டீஸ், Apollo Hospitals, Wipro, Divis Labs, HCL Technologiesஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. FMCG மற்றும் பொதுத்துறை வங்கிகள், உலோகம், ஆற்றல்துறை பங்குகள் தலா 1 முதல் 4 விழுக்காடு வரை சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பம்,சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபத்தை சந்தித்தன. Zydus Life, Zomato, Strides Pharma, Star Cement, Parag Milk Foods, Oracle Financial Services, Max Healthcare, L&T Technology, Kirloskar Oil, JSW Holdings, JSW Energy, JBM Auto, Indian Hotels, HCL Technologies, GTL Infra, Global Health, Dr Reddy’s Labs, Bharat Forge, Apollo Hospitals, ACC, Aarti Industriesஉள்ளிட்ட 350க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5830 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 77 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.