பங்குச்சந்தைகளில் ரத்த ஆறு…
இந்திய பங்குச்சந்தைகளில்18 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 628 புள்ளிகள் சரிந்து 71,500 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 புள்ளிகள் சரிந்து 21,572 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. முதலீட்டாளர்களுக்கு 4.53 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் அதிகபட்சமாக 8.5% சரிவை எச்டிஎப்சி வங்கி சந்தித்துள்ளது. சரி இத்தனை பெரிய சரிவுக்கு என்னதான் காரணம் என்பதை இப்போது பார்க்கலாம்.. முதலாவதாக எச்டிஎப்சி வங்கியின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த காலாண்டில் இந்நிறுவன லாபம் 34%உயர்ந்துள்ளபோதும், முதலீட்டாளர்களுக்கு அத்தனை பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. இரண்டாவதாக உலக சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. சீனாவில் பொருளாதாரம் 5.2%உயர்ந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட சற்று அதிகமாகும். ஆசிய பங்குச்சந்தைகள் 2%வரை சரிந்துள்ளன. மூன்றாவதாக மார்ச் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டியை வரும் மார்ச் மாதம் குறைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அமெரி்க்க பங்குச்சந்தைகள் விழ வாய்ப்புள்ளது. இவை தவிர்த்து அமெரிக்க டாலரின் மதிப்பு ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது போக அமெரிக்க நிதி வளர்ச்சி 4விழுக்காடுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாகும். இந்த 5 பிரதான காரணிகளால் இந்திய சந்தைகளில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டுள்ளது.