வட்டி விகிதத்தை குறைப்பதை நிறுத்த வேண்டுமா?
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உயர்த்தப்பட்ட அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் கடன்களின் வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டில்தான் வட்டியை குறைக்கவேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நுகர்வோர் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 0.1%உயர்ந்து அமெரிக்காவில் 2.7%ஆக உள்ளது. இது கடந்த அக்டோபரில் 2.6%ஆக இருந்தது. ஒரு கட்டத்தில் 7% ஆக இருந்த பணவீக்கம் தற்போது 2 விழுக்காடாக உள்ளது. இதனால் அரசு மற்றும் முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து அழுத்தங்கள் வருகின்றன. அதே நேரம் வேலைவாய்ப்பின்மை தரவுகள் மிகவும் மோசமாக உள்ளன. பணவீக்கம் மற்றும் அது சார்ந்த ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையிலேயே கடன்கள் மீதான வட்டி கிடைக்கும் என்றும், 2% என்ற அளவே இலக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கும் நிலையில் வட்டி விகிதமும் அது சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க அரசிடம் இருக்கும் புள்ளிவிவரங்களை வைத்து முதலீட்டாளர்கள் இந்தவாரம் முதலீடு செய்யலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.