உச்சநீதிமன்றத்தில் Roche Vs Natco
சுவிஸ் பார்மா நிறுவனமான ரோச்சே தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதால், நாட்கோ பார்மாவின் பங்குகள் 3.5% சரிந்தன.
ரிசிடிப்லாம் மருந்தை வெளியிட நாட்கோ பார்மாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ரோச்சே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அக்டோபர் 16 அல்லது 17 ஆம் தேதிகளில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இதைத் தொடர்ந்து NSEயில் நாட்கோ பார்மா பங்குகள் 3.5% குறைந்து ரூ.808.7 க்கு வர்த்தகம் செய்யப்பட்டன.
டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரோச்சே நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) மருந்தான ரிஸ்டிப்லாமை நாட்கோ பார்மா நிறுவனம் இந்தியாவில் விற்க அனுமதித்தது. மார்ச் 2025 இல் வெளியிடப்பட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ரோச்சே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
முந்தைய உத்தரவில், உயிர்காக்கும் மருந்துகள் மலிவு விலையிலும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, ரோச்சேயின் ‘ரிஸ்டிப்ளம்’ மருந்தின் ஜெனிரிக் ரக பிரதியை அறிமுகப்படுத்த நாட்கோவுக்கு வழி வகுத்தது.
ரோச்சேவின் காப்புரிமை இந்தியாவில் செல்லாதது குறித்து தனி நீதிபதி பெஞ்ச் கருத்தில் கொண்டு, அதற்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், பெரும்பாலான நோயாளிகள் அதை வாங்க முடியாததாக உள்ளதை கருத்தில் கொண்டு, பொது நலன் அடிப்படையில் இந்த உத்தரவை பிறபித்தது
