ஸ்விக்கி ஐபிஓவுக்கு இசைவு?
உணவு மற்றும் மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி, 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஐபிஓவை வெளியிட செபி இசைவு தெரிவித்துள்ளது. பெங்களூருவை அடிப்படையாக இயங்கி வரும் இந்த நிறுவனம் அண்மையில் ஐபிஓவுக்கான பணிகளை தொடங்கியது. udrhp என்ற ஆவணத்தை ஸ்விக்கி நிறுவனம் வெளியிடவேண்டும். அதில் ஏதேனும் கருத்துகள் இருந்தால் 21 நாட்களுக்குள் பொதுமக்கள் பதில் அளிக்கலாம். ஐபிஓ வாயிலாக 3,750 கோடி ரூபாயும், ofs வாயிலாக 6664 கோடி ரூபாயும் நிதி திரட்ட ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. 24 நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் ஸ்விக்கி நிறுவனத்தின் வருவாய் 5,476 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் இழப்பு மட்டும் 1600 கோடி ரூபாயாக இருந்தது. ஸ்விக்கிக்கு போட்டியாளரான சொமேட்டோ நிறுவனம் இதே காலகட்டத்தில் 12,114 கோடி ரூபாய் வருவாயும், 351 கோடி ரூபாய் லாபமும் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.