ஐபிஓ மதிப்பை குறைத்த ஸ்விகி..
இந்தியாவில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் ஸ்விகி அண்மையில் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டின் மதிப்பை 15 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 11.3 பில்லியன் அமெரிக்க பில்லியன் டாலராக குறைத்துள்ளது. சந்தையில் நிலவும் சமநிலையற்ற சூழல் மற்றும் அண்மையில் ஹியூண்டாய் ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததை மனதில் வைத்தே ஸ்விகி இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியமும், பிளாக்ராக் நிறுவனமும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்விகியில் முதலீடு செய்ய இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 2023க்கு பிறகு தொடர்ந்து 4 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் நிலவிய பெரிய சரிவு இதுவாகும். நிஃப்டி 8 விழுக்காடாக உள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி இருந்த சந்தை மதிப்பை விட பெரிதும் குறைந்துள்ளதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை அதிகளவில் விற்றதும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதிக தொகை வைத்து விற்றதால் அண்மையில் ஹியூண்டாய் நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு பெரிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வில்லை. இதையுடுத்து ஸ்விகி நிறுவனம் புதிய உத்தியை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2022-ல் ஸ்விகி நிறுவன சந்தை மதிப்பு 10.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. துரித வணிகத்திலும் போட்டியாளரான சொமேட்டோவுடன் ஸ்விகி போட்டியிட்டு வருகிறது. இந்திய ஐபிஓ சந்தையில் 270 நிறுவனங்கள் இதுவரை 12.57 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதுவரை முதலீடுகளை பெற்றுள்ளன. கடந்தாண்டு வசூலான 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடவும் இந்தாண்டு வர்த்தகம் அதிகரித்துள்ளது.