டாடா குழுமத்தில் மீண்டும் ஒரு ஐபிஓ?

டாடா குழுமத்தில் கடந்தாண்டுதான் டாடா டெக்னாலஜீஸ் ஐபிஓ கொண்டுவரப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டாடா கேபிடல் நிறுவனத்தில் புதிய ஐபிஓ தயாராகி வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி நிறுவனம் தனது ஐபிஓவை வெளியிட்டது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாராத நிதி நிறுவனமாக உள்ள டாடா கேபிடலில் ஐபிஓ தயாராகி வருகிறது. அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ள டாடா கேபிடல் ஐபிஓ மதிப்பு 17ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய கோடக் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிறுவனத்தின் உதவியை டாடா நாடியுள்ளது. டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தை விட 5 மடங்கு அதிக நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் 1,100 ரூபாயாக இருந்த டாடா கேபிடல் நிறுவனத்தின் பங்கு தற்போது 900 ரூபாயில் வணிகமாகி வருகிறது. இந்த பங்குகள் 374 கோடி ஆக உள்ளது. டாடா கேபிடலின் மதிப்புமட்டும் 3.5லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. டாடா கேபிடல் நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 93%ஆக இருக்கிறது.
அடுத்தாண்டு செப்டம்பரில் பங்குச்சந்தைக்கு இந்த ஆரம்ப பங்கு வெளியீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 நிதியாண்டில் மட்டும் 18,178 கோடி ரூபாய் வருவாயும் , 3315 கோடி ரூபாய் லாபத்தையும் டாடா கேபிடல் நிறுவனம் ஈட்டியுள்ளது.