மீண்டும் ஏற்றம் காணும் டாடா கன்சியூமர்…

பிரபல முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அண்மையில் டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் நிறுவனம் குறித்து நல்ல கண்ணோட்டத்தை அளித்ததால் டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் நிறுவன பங்குகள் 8 விழுக்காடு வரை புதன்கிழமை ஏற்றம் கண்டன.
இதற்கு முன்னதாக நியூட்ரல் என்ற நிலையில் டாடா நிறுவனத்தை கோல்ட்மேன் சாச்ஸ் வைத்திருந்தது. இந்த நிலையை தற்போது வாங்கலாம் என்று கோல்ட்மேன் சாச்ஸ் மாற்றியுள்ளது. இது டாடா நிறுவனத்தின் பொருட்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டார்கெட் விலையாக ஒரு பீஸ் ஆயிரத்து 40 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ஆகவும் சாச்ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக டாடா கன்சியூமர் நிறுவன பங்குகள் 992.4 ரூபாயாக புதன்கிழமை வணிகமானது. 2025-2027 வரையிலான காலகட்டத்தில் டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் வலுவான வளர்ச்சி இருக்கும் என்று சாச்ஸ் கூறியிருந்தது. டாடா கன்சியூமர் நிறுவனத்தின் டீ சந்தை மட்டும் உயரும் என்றும் கணிக்கப்பட்டது.
30 பொருளாதார நிபுணர்களில் 25 பேர் டாடா கன்சியூமர் தயாரிப்பு பங்குகளை வாங்கலாம் என்றும் 4 பேர் நிறுத்தி வைக்கும்படியும், ஒருவர் விற்றுவிடும்படியும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தாண்டில் மட்டும் டாடா கன்சியூமர் நிறுவனத்தின் பங்குகள் 12.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. நேற்றைய வணிகத்தின்போது மட்டும் 8%உயர்ந்த டாடா கன்சியூமர் நிறுவன பங்குகள், ஆயிரத்து 73 ரூபாயாக விற்கப்பட்டது.