களமிறங்கியது டாடா!!!
இந்தியாவில் ஐபோன்களை பெகட்ரான், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை அசம்பிள் செய்து தரும் ஆலை சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.
நிலைமை இப்படி இருக்க இந்தியாவிலேயே பெரிய ஐபோன் ஆலை ஓசூர் அருகே அமைய உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ஆலையில் மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராஞ்சியில் இருந்து மட்டும் 6 ஆயிரம் பழங்குடியின பெண்கள் பணியாற்ற இருக்கின்றனர் டாடா எலக்ட்ராணிக்ஸ் நிறுவனம் தனது ஆலையில் ஐபோனை உற்பத்தி செய்ய இருக்கிறது. பாக்ஸ்கான் ஆலைதான் ஐபோன் உற்பத்தியில் தற்போது தமிழகத்தில் பெரிய ஆலையாக இருந்தது. ஆனால் டாடாவின் புதிய ஆலை அதைவிட பல மடங்கு பெரிதாக அமைகிறது. டாடா ஆலையைப் போலவே பாக்ஸ்கானும் ஓசூர் அருகே மற்றொரு தொழிற்சாலையை அமைத்து அங்கும் ஐபோன் உற்பத்தியை செய்ய இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.