டாடாவின் அதிரடி திட்டம்…
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ்,தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை செய்துள்ளது. அதன்படி டாடாவின் மின்சார கார்களை மீண்டும் விற்கவும், எக்ஸசேஞ்ச் வசதிகளை செய்து தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னி என்ற இணைய நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் தங்கள் மின்சார கார்களை மீண்டும் ஒருமுறை வேறு நபர்களுக்கு விற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட நெக்சான் ஈவி எக்ஸ்z மாடல் கார் இந்த தளத்தில் 11.61லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதேகார் புதிதாக வாங்கினால் 12.49லட்சம் முதல் 16.49லட்சம் ரூபாய் வரை செலவாகும். டியாகோ நெக்சான் வகை மின்சார கார்களை கொடுத்துவிட்டு புதிய டாடா இ.வி. வாங்க வாடிக்கையாளர்கள் முன்வந்துள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் மின்சார கார்களை வாங்க அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். மின்சார கட்டணம் அதிகம் வருமோ என்று அச்சப்படும் வாடிக்கையாளர்களுக்கு சோலார் தகடுகளையும் அமைத்துத் தரும் பணிகளை டாடா நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இதனால் மின்சாரத்துக்காக ஒரு பைசா கூட வாடிக்கையாளர்கள் செலவு செய்யத் தேவை இருக்காது என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.