அசத்தும் டாடா ஜேஎல்ஆர்..
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை 3 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக டாடா ஜேஎல்ஆரில் ஜேஎல்ஆர் பிரிவு மட்டும் சிறப்பான வணிக வாய்ப்புகளை கொண்டுள்ளது என்பதே. மெர்சிடீஸ், பிஎம்டபிள்யு நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை சிறப்பாக இருந்தது.
ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், டிஃபெண்டர் உள்ளிட்ட கார்கள் சந்தையில் விற்பனையில் அசத்தி வருகின்றன.
ஜேஎல் ஆர் நிறுவனத்தின் முன்பு உள்ள சவால்கள் என்ன என்று பார்க்கலாம்.. 1.தள்ளுபடி.. 2025நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், தள்ளுபடிகள் அதிகரித்துள்ளன இது 4 விழுக்காடு வரை அதிகமாக உள்ளது. இதுவே கடந்தாண்டு 1 விழுக்காடாக இருந்தது. 2.உற்பத்தி பாதிப்பு.. இரண்டாவது காலாண்டில் டாடா ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்துக்கு விநியோகஸ்தர்கள் வழங்கி வந்த உதிரி பாகங்கள் திடீரென குறைந்துபோயின. மேலும் 6 ஆயிரம் வாகனங்களை இரண்டு முறை சோதிக்கும் சூழலும் நிலைமையை சிக்கலாக்கியது. இவை தவர்த்து சீனாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை வாங்க ஆர்வம் குறைந்திருப்பதும் நிலைமையை மோசமாக்கியது. அதே நேரம் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இதுபோன்றநிலை இன்றி, இந்த இரு நாடுகளிலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் அட்டகாசமாக விற்பனையாகின்றன. அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்களும் ஜேஎல்ஆர்நிறுவனத்துக்கு சவாலாக அமைந்துள்ளன. ஜே எல்ஆரின் ரேஞ்ச் ரோவர் ரக கார்களில் மின்சார வகை கார்களை தயாரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் வரும் ஆண்டு இறுதியில் வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.