20,000 கோடி கடன் அடைத்த டாடா சன்ஸ்..
நிர்வாக காரணங்களுக்காக ரிசர்வ் வங்கியிடம் டாடா குழுமம் அண்மையில் ஒரு பதிவு சான்றை ஒப்படைத்தது. அதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.மூலதனங்கள் தேவைப்படுவதால் தனது பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக டாடா குழுமம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதலீடுகள் 35.7% உயர்ந்து 15.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2023-ல் 11.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் விதியின்படி கடன்கள் இருந்தால் பங்குச்சந்தைகளில் டாடா குழும நிறுவனங்களை பட்டியலிட சில நிபந்தனைகள் தேவைப்படும் என்பதால் அந்நிறுவனம் 20,300 கோடி ரூபாய் கடன்களை திரும்ப செலுத்தியுள்ளது. NBFC-UL என்ற வகையில் டாடா குழும நிறுவனங்களை ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டு பட்டியலிட்டது. பட்டியலிட்ட 3 ஆண்டுகளுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும். கடன்களை அடைத்துவிட்ட நிலையில் பங்குச்சந்தையில் பட்டியலிடவேண்டிய அவசியம் தற்போது டாடாவுக்கு ஏற்படவில்லை. டாடா சன்ஸ் நிறுவனம், தனது கிளை நிறுவனமான டிசிஎஸில் இருந்து 2கோடியே 34 லட்சம் பங்குகளை விற்று 9ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதியை பெற்றது. கடந்த டிசம்பரில் டாடா சன்ஸ் நிறுவனம், டிசஎஸ் நிறுவனத்திடம் இருந்து 2கோடியே 96 லட்சம் பங்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. டிசிஎஸ் நிறுவன பங்குகள் உள்ளிட்ட 13 நிறுவன பங்குகளிடம் இருந்து கிடைத்த டிவிடண்ட்டுகளால் 24,000கோடி ரூபாய் பணம் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. இதில் டிசிஎஸ் மட்டும் 19,000 கோடி ரூபாய் டிவிடன்ட் அளித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் முறையே 2000கோடி, மற்றும் 1450 கோடி ரூபாய் பணத்தை டிவடண்ட்டாக அளித்துள்ளன. இவை தவிர்த்து 405 கோடி ரூபாய் பணம் பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்டும் செய்துள்ளது.