ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு என்ன ஆச்சி?
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன காபி கடைகளை திறக்கும் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. 100 கடைகளுக்கு பதிலாக தற்போது 80 கடைகளை மட்டுமே திறக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு 120-க்கு பதிலாக 100 கடைகளை மட்டுமே திறக்க உள்ளதாக சுனில் டிசோசா கூறியுள்ளார். 2028 ஆண்டுக்குள் இந்தியாவில் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் கிளைகள் அதாவது 1000 கடைகள் இருக்க வேண்டும் என்பதே இலக்காகும். நடுத்தர வருவாய் உள்ள மக்கள் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு செல்லவே அதிக ஆர்வம் காட்டி வந்தது ஒரு காலம், தற்போது விலைவாசி உயர்வு காரணமாக பெரும்பாலானோர் அங்கு செல்வதில்லை. இந்தியாவின் டாடா மற்றும் அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தி வரும் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் 450க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டில் 143.6மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. எனினும் முதல் பாதி ஆண்டில் குறைவான வருவாயே அந்நிறுவனத்துக்கு கிடைத்தது. இந்தியாவில் மக்கள் யோசித்து சாப்பிடுவதால் அண்மையில் யம் பிரான்டின் பீசாகடை திறக்கும் முடிவும் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.