டாடா ஸ்டீல் புதிய திட்டம்…
ஸ்டீல் பொருட்களை உருக்குவதற்கு தேவைப்படும் எரிபொருளை மாற்றி மின்சாரத்தில் இயக்க அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட அரசு உதவ வேண்டும் என்று பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனம் கோரியது. ஆனால் போதிய ஒத்துழைப்பு புதிய அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதால் டாடா குழுமம், தனது ஸ்டீல் வியாபாரத்தை பிரிட்டனில் இருந்து வெளியே எடுக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே செல்வதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக டாடா குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு 50லட்சம் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்யப்படும் நிலையில் டாடா நிறுவனம் கோரும் வசதிகளை பிரிட்டன் அரசு செய்து தரவில்லை. இதனாலும், அதிக செயல்பாட்டு கட்டணத்தாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது
பிரிட்டனில் ஆகும் செலவைவிட நெதர்லாந்தில் ஆகும் செலவு குறைவாக உள்ளதாகவும் டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டாடா குழுமத்தின் திடீர் முடிவால் பலர் வேலை இழக்கும் அபாயத்துக்கு ஆளாகியுள்ளனர்
உரிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.