சிங்கப்பூருடன் கைகோர்க்கும் டாடா..
செமிகண்டக்டர் துறையில் முனைப்பு காட்டும் டாடா சன்ஸ் நிறுவனம், தற்போது தனது கூட்டாளியாக சிங்கப்பூரை சேர்த்துள்ளது. டாடாசன்ஸ் தலைவர் சந்திரசேகரனுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சிங்கப்பூர் உள் விவகாரங்கள் துறை அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செமிகண்டக்டர்கள் பற்றி இருதரப்பினரும் பேசியதாக கூறினார். இந்த சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது சண்முகத்துடன், தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங்கும் உடன் இருந்தார். சிங்கப்பூர் அளவில் சிறியதாக இருந்தாலும் அங்கு 25 செமிகண்டக்டர் ஆலைகள் உள்ளன.
91 ஆயிரம் கோடி ரூபாயில் குஜராத்திலும், 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அசாமிலும் இரண்டு ஆலைகளை டாடா குழுமம் நிறுவ உள்ளது. ஆற்றல் செமிகண்டக்டர்கள் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே ஆழமான தொடர்பு உள்ளது என்றார். இந்தியாவில் மேலும் அதிக முதலீடு செய்ய சிங்கப்பூர் தயாராக இருப்பதாக கூறிய சண்முகம், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ நிகழ்ச்சியில் சந்திரசேகரன், ஜம்ஷைத் கோத்ரெஜ், ஃஜியா மோடி, நவ்ஷாத் ஃபோர்ப்ஸ், முகுந்த் மற்றும் சந்திரஜித் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்