வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டாடா..
பிப்ரவரி 19 ஆம் தேதி, 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய கர்நாடக அரசுடன் டாடா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிட்டட் ஆகிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளன.
இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடும்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கனரக தொழில் துறை அமைச்சர் எம்பி பாட்டீல் ஆகியோர் உடன் இருந்தனர். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் மேம்பாடு பணிகளையும் டாடா செய்ய இருக்கிறது. டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் அடுத்த கட்டமாக கோலாரில் 1030 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. துப்பாக்கி உற்பத்தி ஆலையில் 310 கோடி, பாதுகாப்பு தளவாடங்களுக்கு 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. துப்பாக்கி உற்பத்தியின் மூலம் சிறுகுறு நிறுவனங்களைச் சேர்ந்த 300 முதல் 350 நிறுவனங்களுக்கு வேலை கிடைக்க இருக்கிறது. பல்வேறு நிறுவனங்களின் வருகையால் கர்நாடக மாநில தொழில்வளம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.இது குறித்து துறை சார்ந்த பிரபலங்கள் அவ்வப்போது மேடையில் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும்.