அரசுக்கு AMFIகோரிக்கை..

இந்தியாவில் பரஸ்பர நிதி அமைப்பான AMFI முக்கியமான அமைப்பாக திகழ்கிறது. இந்த அமைப்பு அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அடுத்தாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், டெப்ட் பரஸ்பரல நிதியின சட்டங்களை மாற்ற AMFIகோரிக்கை விடுத்துள்ளது. நீண்டகால முதலீட்டு ஆதாயத்துக்கு 20 % வரி என கடந்தாண்டு மார்ச் மாதம் மாற்றம் செய்யப்பட்டது. அதிகம் பேர் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அதற்கு இன்டக்சேஷன் தேவை என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களின் ஈக்விட்டி பங்குகளில் 35 விழுக்காடு பரஸ்பர நிதியாகவே உள்ளது. நீண்டகால முதலீட்டு ஆதாயத்துக்கு ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருவாய்க்கும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. டெப்ட் பரஸ்பர நிதிக்கும் லாபத்துக்கும் வெவ்வேறான அனுகுமுறைகள் இருப்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 2023 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாங்கப்பட்ட பரஸ்பர நிதிக்கு LTCG எனப்படும் வரி 20-க்கு பதிலாக 12.5% வசூலிக்கப்படுகிறது. ஆனால் பலன்கள் கிடைக்கவில்லை என்று AMFI கூறுகிறது. இந்த குழப்பத்துக்கு எளிமையான தீர்வை மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.