வேலைக்கு ஆட்களை தேடும் டெக் நிறுவனங்கள்..
உலகின் பல நாடுகளிலும் டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டு வரும் சூழலில் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் டெக் பணியாளர்கள் ஆட்குறைப்பு கடந்த 12 முதல் 18 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த சூழலில் இந்தியாவில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. கடந்த 5 மாதங்களாகவே சாதகமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Xpheno என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மார்ச் மாதம் முதல் 1லட்சத்து 68 ஆயிரம் பேராக இருந்த வேலைவாய்ப்பு மே மாத்தில் 1.56 லட்சமாக குறைந்ததாகவும், ஆனால் தற்போது கடந்த மே மாத நிலையை விட 25விழுக்காடு கூடுதலாக ஆட்களை தேர்வு செய்ய ஆர்டர்கள் குவிவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் கேம்பஸ் இன்டர்வியூகளும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த 2022 முதல் இதுவரை 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கிய நிலையில் , தற்போது நிலை மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புனே மற்றும் பெங்களூருவில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அளவு 37 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லர்னிங் பிரிவு பணிகளுக்குத்தான் தற்போது அதிக டிமான்ட் இருப்பதாக கூறப்படுகிறது