தொடரும் டெக் பணியாளர்கள் ஆட்குறைப்பு..
சர்வதேச அளவில் டெக் நிறுவனங்கள் ஓரளவுக்கு சீரான நிலையை எட்டியுள்ளபோதும், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன 2024-ன் இரண்டாவது பாதியிலும் ஆட்குறைப்பு தொடர்கிறது. பிரபல நிறுவனங்களான ஐபிஎம்மில் மூத்த புரோகிராமர்கள், விற்பனை மற்றும் உதவி பணியாளர்களை குறிவைத்து நீக்கி வருகின்றனர். இந்தியாவில் தொடக்க நிலையில் உள்ள டோசி என்ற மருத்துவ நிறுவனம் தனது பணியாளர்களில் 40 பேரை பணிநீக்கம் செய்தனர். வீ டிரான்ஸ்வர் நிறுவனம் தனது பணியாளர்களில் 75%பேரை பணிநீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது.
இதேபோல் சிஸ்கோவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்கிறது. பிரபல நிறுவனமான மைக்ரோசாஃப்டின் எக்ஸ்பாக்ஸ் நிறுவனம், தனது பணியாளர்களில் 650 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. குவால்காம், டெல் உள்ளிட்ட பிரபல டெக் நிறவனங்களும் ஆட்குறைப்பை தொடர்ந்து வருவதால் அதில் பணியாற்றுவோர் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆட்குறைப்புக்கு பின்னணியில் செயற்கை நுண்ணறிவு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் ஆட்குறைப்பு பணிகள் தீவிரமாக நடந்தாலும், 2025-ல் புதிதாக ஆட்களை தேர்வு செய்யும் விகிதம் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. அடுத்தாண்டில் 10முதல் 15 % வரை புதிய பணியாளர்கள் தேர்வும் நடைபெறும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெக் நிறுவனங்கள் மட்டுமின்றி சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களும் ஆட்களை குறைத்து வருகின்றனர். டிஸ்னி, பாராமவுன்ட் நிறுவனங்களிலும் ஆட்குறைப்புகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.