13%விழுந்த டெஸ்லா பங்குகள்..
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவன பங்குகள் கடந்த 3 மாதங்களில் 13 விழுக்காடு சரிவை கண்டுள்ளன. பழைய மாடல் கார்களை வாங்க யாரும் முன்வராத சூழலும் ஏற்பட்டுள்ளது. வலது சாரி அரசியலை டிரம்புடன் இணைந்து மஸ்க் முன்னெடுத்ததே வியாபாரத்தில் சரிவு ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 3.36லட்சம் கார்களை மட்டுமே டெஸ்லா விற்றுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 3.87லட்சம் கார்களை அந்த நிறுவனம் விற்றுள்ளது. சிறப்பு சலுகைகள், பணமே இல்லாமல் கார் வாங்கும் வசதி அளித்துமே டெஸ்லா நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டுள்ளன. ஃபேக்ட் செட் என்ற அமைப்பின் கணக்குப்படி 4லட்சத்து 8 ஆயிரம் கார்களை அந்த நிறுவனம் விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டிசம்பரின் பாதிக்கு பிறகு டெஸ்லாவின் நிறுவன பங்குகள் கணிசமாக வீழ்ந்தன. அமெரிக்காவில் டெஸ்லாவுக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக இன்னும் எவ்வளவு விலை குறையப்போகிறதோ என்று பொதுமக்கள் டெஸ்லா கார்பற்றி விமர்சனங்களை முன்வைக்கின்றனர். டெஸ்லா மட்டுமின்றி தி ஆஸ்டின் என்ற நிறுவனமும் அமெரிக்காவில் பங்குகளை இழந்து வருகின்றன. பிஒய்டி என்ற சீன நிறுவனம் வெறும் 5 நிமிடங்களில் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதியை அறிமுகப்படுத்தும் நிலையில் டெஸ்லாவின் பங்குகள் பெரிய சரிவை கண்டுள்ளன. கடந்த புதன்கிழமை பங்குச்சந்தைகள் திறக்கப்பட்டதும் டெஸ்லா நிறுவன பங்குகள் 4 %வரை குறைந்தன.
