தாலி உணவுகள் விலை குறைப்பு…
கடந்த டிசம்பரில் வெங்காயம்,தக்காளியின் விலைகள் கடுமையாக குறைந்தன. இதன் விளைவாக இந்தியாவில் தாலி வகை உணவுகளின் விலை 4 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. இதிலும் குறிப்பாக அசைவ தாலி வகை உணவுகளின் விலை டிசம்பரில் 5% குறைந்திருக்கிறது என்கிறது கிரிஸில் என்ற அறிக்கை.அதாவது சராசரியாக ஒரு மாதத்துக்கு முன்பாக ஒரு தாலி வகை உணவின் விலை 60 ரூபாய் 40 காசுகளாக இருந்த நிலையில் , டிசம்பரில் அது 57 ரூபாய் 60 காசுகளாக குறைந்திருக்கிறது. இதேபோல் சைவ தாலி உணவுகள் விலை 3 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. விலை சற்றே குறைந்திருந்தாலும் கடந்தாண்டைவிட 12 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை உயர்வு 82 மற்றும் 42 விழுக்காடு உயர்ந்ததே இந்த விலையேற்றத்தின் காரணமாக கூறப்படுகிறது. பருப்புகள் விலை 9 விழுக்காடு வரை குறைந்திரு்ககிறது. நவம்பர் மாதத்தில் உணவுப்பொருள் விலைவாசி உயர்வு 8.7%ஆக நவம்பரில் இருந்தது. அக்டோபரில் இது 6.6%ஆக இருந்தது. பருப்புகளின் விலைவாசி உயர்வு இரட்டை இலக்கங்களை 15 மாதங்களாக எட்டியிருந்தது. காய்கனியின் விலைவாசி உயர்வு விகிதம் நவம்பரில் 17.7%உயர்வை சந்தித்தது. பிராய்லர் கோழிகளின் விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்அளது. சில்லறை பொருள் பணவீக்கம் என்பது ஆண்டுக்கு ஆண்டு நிலவரப்படி டிசம்பரில் 5.6% ஆக இருக்கலாம் என்றும் இது இதற்கு முனஅக்டோபரில் 5.55%ஆக இருந்தது. இந்தியாவின் விலைவாசி உயர்வு குறித்த தரவுகளை இந்தியா வரும் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தியாவில் உணவுப்பொருள் விலைவாசி என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவால் விலைவாசி உயர்வை ஓரளவு சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.