கடி வாங்காமல் தப்பிய ஆப்பிள்!!
இந்திய போட்டி ஆணையத்தில் அண்மையில் கூகுளுக்கு எதிராக நடந்த வழக்கில் கூகுள் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 936கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நி்லையில் இதே அமைப்பில் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் மீது நம்பிக்கையில்லை என்று வழக்கு தொடர்பட்டுள்ளது
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் போட்டி ஆணையத்தில் முறையிட்டது அதில் ஆப்பிள் நிறுவனம் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று வாதிடப்பட்டது.மேலும் கூகுள் நிறுவன இயங்குதளத்துக்கும் தங்கள் இயங்குதளத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக வாதிடப்பட்டது. கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 3-ம் நபர் பணம் செலுத்தும் முறையை வைத்துக் கொள்ளாமல் இருந்ததாகவும் புகார் எழுந்துதது. ஆனால் அதே புகார் ஆப்பிளில் இல்லை என்றும் இந்தியாவில் 3-ம் நபர் வாயிலாக பணம் செலுத்தும் முறை ஆப்பிளில் உள்ளதாகவும் அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை ஏற்ற போட்டி ஆணையம் கூகுளிடம் காட்டிய கடுமையான தீர்ப்பை இங்கு அளிக்கவில்லை
இந்தியாவில் ஆப்பிளின் சந்தை மிகவும் சிறியது என்று கூறியுள்ளனர். இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகம் என்பதால் அதனை பெரும்பாலானோர் வாங்குவதில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தியாவில் ஆப்பிளின் பங்களிப்பு வெறும் 3.8% ஆகவே உள்ளது, இந்த விவகாரத்தில் கூகுளை சரமாரியாக விமர்சித்த போட்டி ஆணையம் தற்போது அடக்கி வாசித்துள்ளது.