மாற்றம் தந்த ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் முதல் வர்த்தக நாளில் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 445 புள்ளிகள் உயர்ந்து, 80,248 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 276 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 3.25லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. UltraTech Cement, Apollo Hospitals, Grasim Industries, JSW Steel ,Shriram Finance, உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. HDFC Life, Cipla, NTPC, SBI Life Insurance, Britannia Industries.உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு பெரிதாக வீழ்ந்தன. ரியல் எஸ்டேட், மருந்து, உலோகம், ஐ.டி. நிறுவன பங்குகள், ஆட்டோமொபைல், ஊடகத்துறை பங்குகளும் 1 முதல் 3% ஏற்றம் கண்டன. Affle India, Caplin Labs, Coforge, Divis Labs, Dixon Technologies, eClerx Services, Info Edge, Kaynes Technologies, KEC International, Laurus Labs, Lloyds Metals, Medplus Health, PB Fintech, Praj Industries, Suven Pharma, Syngene International, Vedant Fashions, உள்ளிட்ட 240க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. திங்கட் கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் குறைந்து 7090 ரூபாயாகவும், ஒரு சவரன் 56,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.