இந்த பொருளுக்கு இறக்குமதி வரியை நீக்குகிறது மத்திய அரசு..

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தயாரிக்கும் சில பொருட்களுக்கான இறக்குமதி வரியே கிடையாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கார், பைக் மற்றும் மொபைல் ஃபோன்களில் பயன்படுத்த பேட்டரிகள் பெரிய பங்களிப்பை தருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க அரசு இந்தியாவின் மீது பதில்வரி என்ற சுமையை சுமத்த இருக்கிறது.
இதனை சமாளிக்கும் நோக்கில் மின்சார வாகன பேட்டரி தயாரிப்பில் சில பொருட்களுக்கு இறக்குமதி வரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. உள்ளூர் உற்பத்தி மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
புதிய அறிவிப்பால் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய பயன்படும் 35 பொருட்களுக்கு வரி கிடையாது. அதேபோல், மொபைல் போன்உற்பத்திக்கான 28 பொருட்களுக்கு வரி 0 தான். வரிவிதிப்பில் உள்ள சிக்கல்களை களைவது தொடர்பாக இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது. பதில் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அரசு அச்சுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களின் வரி பாதியாக குறைய இருக்கிறது.