முடிவுக்கு வந்த ஏற்றம்..

ஏழு நாட்கள் உயர்வுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவு காணப்பட்டது.வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 728 புள்ளிகள் சரிந்து 77 ஆயிரத்து 288 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181 புள்ளிகள் சரிந்து 23ஆயிரத்து 487 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. Indusind Bank, Powergrid, Titan உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன., Asian Paints, Bajaj Finance, Maruti, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்கப்பட்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரத்துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன. நேற்று மேலும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8195 ரூபாயாகவும், ஒரு சவரன் 65,560 ரூபாயாகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் 1 ரூபாய் அதிகரித்து 111 ரூபாயாக தொடர்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும், இதேபோல் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரங்களையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்