ஊழியர்கள் லீவ் எடுத்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கும் நிறுவனம்!!!
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் சிலருக்கு 50 விழுக்காடு
சம்பளத்தை பிடித்துள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து சில ஊழியர்களை சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது 60 விழுக்காடு பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாகவும், சிக்கன நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியான நிலையில் , அதனை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் மறுத்துள்ளார். அந்த நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிலுவை மட்டும் 250 கோடி ரூபாய் உள்ளது திவால் நிலையில் உள்ள ஜெட் ஏர்வேசில் 2019ம் ஆண்டுக்கு முன்பு இருந்த பணியாளர்களுக்கு பணத்தை தர பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை பணம் அளிக்கப்படவில்லை. கடந்த 2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்கள் பணம் திரும்ப வராததால் NCLTயிடம் முறையிட்டனர்
இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் விமான சேவையை அளிக்க அந்நிறுவனம்
கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் அளிப்பதில் தொய்வு உள்ளதால் மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.