கிரிப்டோ சந்தை… நடந்தது இதுதான்!!!!
கிரிப்டோகரன்சிகள் நம்பகம் அற்றவை என துவக்கம் முதலே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் பிரபல கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன ftx நிறுவனம் திவாலானதை எளிமையாக சொல்ல வேண்டுமானால் 1 ரூபாய் மதிப்புள்ள பொருளை
10 பைசாவுக்கு விற்பதற்கு சமமான நிலைக்கு வந்ததே சாட்சி. இதேபோல் கிரேஸ்கேல் பிட்காயின் டிரஸ்ட் என்ற அமைப்பும் திவாலாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் உச்சத்தில் இருந்த நிறுவனங்கள் தற்போது 80 % வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இதன் விளைவாக அனைத்து வகையான கிரிப்டோ கரன்சிகளும் சரிவை சந்தித்துள்ளன அதிவேகத்தில் உயர்ந்து தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ள கிரிப்டோ சந்தைகளின் நிலையை அமெரிக்க பொருளாதார நிபுணர் இர்விங் ஃபிஷர், நிதி முண்டியடிப்பு என்று தெரிவிக்கிறார். குறிப்பிட்ட ஒரு தொழிலில் 10 பேர் முதலீடு செய்திருந்த சமயத்தில், பணம் போட்ட அத்தனை பேரும் ஒரே நேரத்தில் போட்ட பணத்தை திரும்ப எடுத்தால் தொழில் எப்படி நடக்கும் என்பதே நிதி முண்டியடிப்பாகும் நிதி ஆதாரத்தில் மிக வலுவாக உள்ளவர்களும் சம்பந்தமே இல்லாமல் திடீரென திவாலாவதும் நிதி முண்டியடிப்பின் முக்கிய பாதக அம்சமாகும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போலவே முதலில் பணம் போடும்போது சிறப்பானதாக தெரிந்தாலும் பின்னர் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைக்கத்தோன்றும் நிலையில் தான் இப்போது திவாலான கிரிப்டோ கரன்சி நிறுவனங்களும், அதில் முதலீடு செய்தவர்களும் வருத்தப்படுகின்றனர்.