பங்குதாரர்களுக்கு நூதனமாக நன்றி தெரிவித்த இந்திய நிறுவனம்
மெட்ரோ பிரான்ட்ஸ் என்ற நிறுவனம் காலணிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில்தான் பங்குச்சந்தையில் அறிமுகமாகியது. இந்த நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பங்குகளை விற்று முதலீடுகளை ஈட்டி காலணி வியாபாரத்தை ஜோராக செய்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் அந்த நிறுவனம், தங்கள் பங்குதார்ர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் நிறுவனப் பொருட்களில் 15 விழுக்காடு தள்ளுபடி அளிப்பதாக கூறியுள்ளது.
மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் காலணிகள், பெல்ட் உள்ளிட்டவற்றை பங்குதார ர்கள் வாங்கிக்கொள்ளலாம், பரிசுக்கூப்பனின் இ.மெயிலை காட்டினால் மொத்த தொகையில் அதிகபட்சம் 15 விழுக்காடு வரை தள்ளுபடியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தங்கள் முதல் காலாண்டில் மட்டும் லாபமாக 105 கோடியே 70 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் லாபத்தை பகிர்ந்துகொள்ளவும்,அன்பை வெளிப்படுத்தவும் இத்தகைய சலுகையை அறிவிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லாபத்தில் பங்கு தரும் நிறுவனங்களுக்கு மத்தியில் லாபத்தை பங்குதாரர்களுக்கு பரிசாக அளித்து அதிலும் வியாபாரத்தை தொடரும் மெட்ரோ பிரான்ட்ஸ் நிறுவனம் கவனம் ஈர்த்துள்ளது