பணவீக்கத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை இதுதான்…
இந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு. 59 ஆவது சீகன் கவர்னர்கள் மாநாட்டில் , நிலையான மற்றும் குறைந்த பணவீக்கம் பற்றி பேசினார். இப்படி செய்தால் மட்டுமே அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி கிடைக்கும் என்று தெரிவித்தார். வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்றும், தொடர்ந்து 4 ஆவது முறையாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி என்பது 7 விழுக்காடுக்கும் அதிகமாகவும் இருக்கிறது. பல்வேறு சவால்களை இந்தியா சந்தித்து வருவதாகவும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும் இந்தியா வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். சரியான திட்டமிடலுடன், நிதி கொள்கைகள் சரியாக வகுத்ததே இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து சில்லறை பணவீக்கத்தை விட தற்போது குறைவாகவே உள்ளதாக கூறிய அவர், தற்போது சில்லறை பணவீக்க ம் அளவு மெல்ல மெல்ல குறைந்து 4 விழுக்காடாக உள்ளதாக தாஸ் குறிப்பிட்டார். உணவுப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல்கள்தான் இந்தியா சந்திக்கும் மிகமுக்கிய பிரச்சனையாக இருப்பதாக சக்தி காந்ததாஸ் கூறினார். உலக பொருளாதாரம் தாறுமாறாக வீழ்ச்சியடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,ஏகப்பட்ட பிரச்னைகள் வந்து போனாலும் புதுப்புது வாய்ப்புகளும் கதவுகளை தட்டி வருவதாக சக்தி காந்ததாஸ் கூறினார். மத்திய வங்கிகளின் பங்கு முக்கியமானது என்றும் நிதி நிலைத்தன்மையும் முக்கியம் என்று சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார்.