74,000புள்ளி கடந்து வந்த பாதை…
இந்தாண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆண்டாக இதுவரை அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 15 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்ட மும்பை பங்குச்சந்தை 37 வேலைநாட்களில் மேலும் அதிகரித்து 74,000 புள்ளிகளை தொட்டுள்ளது. கடந்த 65 நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தை 5,000புள்ளிகள் உயர்ந்திருக்கிறது.172 வேலை நாட்களில் 10,000புள்ளிகள் உயர்ந்திருக்கின்றன. அண்மையில் கிரிசில் நிறுவனம் வெளியிட்ட கணிப்புக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றமாகவே இருக்கிறது. 1986 ஆம் ஆண்டு வெறும் 550 புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச்சந்தை தற்போது உச்சகட்டதை எட்டி 74 ஆயிரம் புள்ளிகளை கடந்திருக்கிறது. இதற்கு இடையில் 2008 மற்றும் 2020 ஆகிய காலகட்டத்தில் மட்டுமே சென்செக்ஸ் வீழ்ச்சியை கண்டுள்ளது.
1990-ல் சென்செக்ஸ் முதல் முறையாக 1000புள்ளிகளை தொட்டது. அடுத்த ஆயிரம் புள்ளிகளை பெற 270 வேலைநாட்கள் ஆகியுள்ளன. 1999-ல் 5,000, அடுத்த 7 ஆண்டுகளில் 10 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் கடந்திருந்தது. 2006 ஆம் ஆண்டு சென்செக்ஸ் முதல் முறையாக 13 ஆயிரம் புள்ளிகளை பெற்றிருந்தது. இதேபோல் 2007-ல் சென்செக்ஸ் முதல் முறையாக 20,000 புள்ளிகளை கடந்திருந்தது. 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர இந்திய பங்குச்சந்தைகள் முதல் முறையாக கூடுதலாக ஆயிரம் புள்ளிகளை பெற்றது. 2014-ஆம் ஆண்டு வெறும் 28000புள்ளிகளை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்துவந்தன நிலைமை இப்படி இருக்கையில் ஜூலை 3 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு சென்செக்ஸ் முதன் முறையாக 65 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. முதல் 35 ஆயிரம் புள்ளிகளை எட்ட 32 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 35 ஆயிரம் புள்ளிகளுக்கு வெறும் 5.9 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் சிறந்த இடத்தில் இருக்கும் இந்தியா, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.