3 நாட்கள் சரிவுக்கு வந்தது முடிவு….

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 81,224 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 24, 854 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. Axis Bank, Wipro, Eicher Motors, ICICI Bank, Shriram Financeஆகிய நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து முடிந்தன. Infosys, Britannia Industries, Asian Paintsஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. பெரும்பாலான துறை பங்குகள் சரிவில் இருந்து மீண்டுள்ளன. உலோகத்துறை பங்குகள் 1.57 விழுக்காடு உயர்ந்து வணிகத்தை முடித்தது. நிதித்துறை, ஆட்டோமொபைல்துறை, உலோகத்துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. தனியார் வங்கித்துறை பங்குகள் நல்ல லாபம் கண்டன.
அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சமாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து240 ரூபாயாகவும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 105 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.