நிலைமை இன்னும் மோசம் ஆகும்!!!! கவனம்!!!
ஜெனிவாவில் உள்ள உலகளாவிய அமைப்பு WTO உலக வர்த்தக அமைப்பான இந்த அமைப்பு சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள், பொருளாதார நிலைகள் குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் WTO அமைப்பு தனது புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதி மிகவும் நன்றாக இருக்கும் என்று கணித்துள்ள அந்த அமைப்பு உலகளவில் வர்த்தகம் 3.5% ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அளவு 3%ஆக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டது. தற்போது வர்த்தக சூழல் சற்று சீராக உள்ளதாகவும், ஆனால் அடுத்தாண்டின் நிலை ஏற்கனவே கணித்ததைவிட 1 விழுக்காடு குறையும் என்று அதிர்ச்சியளித்துள்ளது. அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை,உலகளவில் உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் உணவு உற்பத்தியில் உரங்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணிகளால் அடுத்தாண்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இதில் ரஷ்யா உக்ரைன் போர் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ல் உலகின் ஜிடிபி எனப்படும் நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியின் சராசரி அளவு 2.3%ஆக சரியும் என்று மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அளவு 3.2%ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது