அமெரிக்க செனட் புதிய திட்டம்…
அமெரிக்காவில் தங்கி வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவது H1Bவிசா. இந்த விசாவை பெறும் நபர்கள் தஹ்கள் குடும்பத்தினரையும் அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம்.இந்நிலையில் அமெரிக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. 1லட்சம் பேருக்கு சிறப்பு சலுகை விதிக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் பேர் எச்ஒன் பி விசா கேட்டு விண்ணப்பித்த நிலையில் பாதி பேருக்கு புதிய சலுகை கிடைக்க இருக்கிறது. எச்1 பி விசா பெறும் நபரின் குழந்தைகள், 8 ஆண்டுகள் வரை எச்.4 பிரிவில் இருப்பார்கள், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச் ஒன்பி விசா வைத்திருக்கும் நபரின் மனைவிகள் எச் 4 விசாக்களக்காக மாற்றப்படுவர். அமெரிக்க செனட் சபையில் இது தொடர்பான விசாரணை வந்தபோது இந்த புதிய அறிவிப்பு வெளியானது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த புதிய அறிவிப்பு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வருவோருக்கு என பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவுக்கு பணி செய்ய அகதிகளாக வருவோருக்கும் உரிய அங்கீகாரம் தரும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2லட்சம் பேருக்கு புதிய சலுகைகள் தரப்பட்டுள்ளன. இது தொடர்பான சட்ட மசோதாவை விரைந்து முடிக்க வெள்ளை மாளிகை அமெரிக்க காங்கிரஸை கேட்டுக் கொண்டுள்ளது.