வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு….
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் 59 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது
அமெரிக்க டாலருக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக டாலரின் தாக்கம் ஆசிய கரன்சிகளில் பிரதிபலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 81 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்
எதிர்பார்த்த அளவை விட அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகம் உயர்த்தியுள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும்போது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக இந்திய ருபாயின் மதிப்பு வீழ்ச்சியை கண்ட நிலையில் அமெரிக்காவின் அறிவிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தாலும் அதனை சரிசெய்யும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கவில்லை. ஏனெனில் இந்திய பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் சூழலில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சில நாட்கள் அதிகமாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது