சீனாவை ஏன் தேர்ந்தெடுத்தோம் என டிம்குக் பேசிய பழயை வீடியோ டிரெண்ட்..
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் டிம்குக். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஏன் அதிகளவில் ஐபோன் உற்பத்திக்கான ஆர்டர்கள் தரப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. குறிப்பாக ஏன் சீனா என்ற கேள்விக்கு, உலகின் பல நாடுகள் சிறப்பாக உற்பத்தியை செய்து வந்தாலும், கச்சிதமான, துல்லியமான பொருட்கள் உருவாக்குவதில் தொழில் நேர்த்தி சீனாவிடம் இருப்பதாக அவர் புகழ்ந்து பேசியுள்ளார். டூலிங் எனப்படும், தனித்துவமான கருவிகளை கையாளும் திறமை சீனர்களிடம் அதிகம் என்றும் டிம் குக் பேசியிருந்தார். இதனை குறிப்பிட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், டிம் குக் கூறுவது உண்மைதான் என்று அப்போதே கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் தொழிலாளர்கள் சம்பளம் குறைவு என்றும் டிம் குக் பேசியிருந்தார். ஆனால் நிலைமையே அங்கு வேறாக இருக்கிறது. சீனாவில் தொழிலாளர்கள் சம்பளம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்டட பிற நாடுகளுக்கு தங்கள் உற்பத்தி ஆலைகளை மாற்றி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.
டிம்குக் பேசிய இந்த காணொலி சுமார் 60 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. டிம் குக்கின் கருத்துகளுக்கு இசைவு தெரிவித்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அண்மையில் இந்தியாவை தவிர்த்துவிட்டு, சீனாவுக்கு சென்றிருந்தார். இதன் காரணமாக சிறப்பான ஆதரவளிப்பதாக சீன பிரதமர் மஸ்க்கிடம் உறுதியளித்தார். சீனாவில்தான் டெஸ்லா நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.