ஒன்னும் பெருசா இல்ல,நஷ்டம்தான் மிச்சம்..
பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுதான் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 106 புள்ளிகள் சரிந்து 71,645 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 28 புள்ளிகள் சரிந்து 21,697 புள்ளிகளாக இருந்தது. தொடக்கத்தில் சிறப்பாக இருந்த சந்தைகள் பின்னர் நேரம் செல்ல செல்ல சரியத் தொடங்கின. பெரிதாக ஒரு புதிய அறிவிப்பும் இல்லாததால் சந்தையில் நிலவிய அனைத்து லாபமும் துடைக்கப்பட்டன. Maruti Suzuki, Cipla, Eicher Motors, SBI Life Insurance,Power Grid Corporation ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இதேபோல் UltraTech Cement, L&T, Dr Reddy’s Laboratories, JSW Steel, Grasim Industries ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. ஆட்டோமொபைல், வங்கி, FMCG,மற்றும் ஆற்றல் துறை பங்குகள் 0.2 முதல் 0.8 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. உலோகம், ரியல் எஸ்டேட்துறை உள்ளிட்ட நிறுவன பங்குகள் தலா 1 விழுக்காடு வரை சரிவை கண்டன. Indian Overseas Bank, Bank of India, BEML, BL Kashyap, Canara Bank, CARE Ratings, Delhivery, Gallantt Ispat, GE Power India, Godrej Consumer, HUDCO, India Tourism Development Corporation, Indian Bank, Infibeam Avenue, LIC Housing Finance, Max Healthcare, Motherson Sumi Wiring India, NBCC (India), Punjab & Sind Bank, Repco Home, Sangam India, Shipping Corporation, Torrent Power, UCO Bank, Union Bank of India, Varroc Engineeringஉள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 47 ஆயிரத்து40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம், முன்தின விலையை விட 30 ரூபாய் அதிகரித்து 5880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 77 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 800 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், சரக்கு, மாறுபடும் செய்கூலி, சேதாரமும் மேலே குறிப்பிட்ட விலைகளுடன் சேர்க்கப்படவேண்டும். அவ்வாறு சேர்த்தால்தான் இறுதியாக நம் கைகளில் இருந்து கடைக்கு எவ்வளவு பணம் செல்லும் என்பது தெரியவரும். இதை நகை வாங்க விரும்புவோர் நினைவில் கொள்ளவும்