ரோடு போட இனி இடம் இல்லை!!!! கார் வாங்காதீங்க!!!
டெல்லியில் மைண்ட் மைன் என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசினார். அப்போது சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பொதுமக்கள் பேருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார். ஒரே ஒரு நபருக்காக காரில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெங்களூரு போன்ற நகரங்களில் சாலை விரிவாக்கத்தாக இடத்தை இதற்கு மேல் எடுக்க முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க பைபாஸ், பல அடுக்குச் சாலைகள்,உள்ளிட்ட அம்சங்களை மத்திய அரசு செய்து வந்தாலும்,மக்கள் தொகை மற்றும் ஆட்டோமொபைல் எண்ணிக்கை அதிகரிப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்றும் கூறினார். மேலும் பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்களில் சாலையை விரிவாக்கம் செய்ய இடமே இல்லை என்று கூறிய அவர், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் சான்று பெருவதில் உள்ள சிக்கல்களையும் பட்டியலிட்டார். தொடர் பேருந்துகள் மற்றும் மின்சார பேருந்துகளை அதிகம் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மத்திய அமைச்சர், இவ்வாறு மாற்று ஏற்பாடுகள் செய்வதால் மத்திய அரசுக்கு நிறைய ஆதாயம் உள்ளதாகவும், ஒரு மின்சார பேருந்து 1 கோடியே 40 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில்,தொடர் பேருந்துகள் 45 முதல் 50 லட்சம் ரூபாய் மட்டுமே ஆவதால் மக்கள் புதிதாக கார் வாங்குவதை தவிர்த்து, இயன்ற வரை பொதுப்போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.