22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளித்த நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது நீண்டகால ஊழியர்களின் நலனுக்காக கார், பைக் உள்ளிட்ட 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பரிசாக அளித்துள்ளது. ஸ்டரக்சுரல் டிசைன் நிறுவனமான அந்த நிறுவனம் அண்மையில் ஆயுத பூஜை கொண்டாடியது. அப்போது 30 ஊழியர்களுக்கு மெர்சிடீஸ் பென்ஸ், எக்ஸ்டர், கிரெட்டா, ஐ20, பிரெசா, எர்டிகா உள்ளிட்ட கார்களை பரிசளித்தது. டீம் டீட்டெயிலிங் சொல்யூசன்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் கண்ணன். இவர் தனது ஊழியர்களுக்கு 28 கார்கள், 29 ஸ்கூட்டர்களை பரிசளித்துள்ளார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பவர்களுக்கு காரும், 7 ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு பைக்கும் தந்துள்ளார். 2005-ல் வெறும் 4 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 180 பேருடன் 2 இடங்களில் இயங்கி வருகிறது. இதுவரை 30 பணியாளர்களுக்கு காரும், 74 பணியாளர்களுக்கு பைக்கும் தரப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு திருமணத்தின்போது ஊக்கத் தொகையாக 1லட்சம் ரூபாய் பரிசும் அளிக்கப்படுகிறதாம். தன் மீதும் தனது நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பயணித்தவர்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்வதாக உரிமையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் பணி பாராட்டப்படுவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *