வாட்ஸ் ஆப்பில் இது புதுசு!!!!
உலகின் பல நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடிக்கும் அதிகமாக
உள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலி அவ்வவ்போது புதுப்புது அப்டேட்களை அளித்து தனது பயனர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்த சூழலில் புதிய வகை வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் சோதித்து வருகிறது. ஆன்டிராய்டு பீட்டா வகையைச் சேர்ந்த போன்கள் வைத்துள்ளவர்களுக்கு கம்பானியன் என்ற வசதி அறிமுகமாகிறது. இந்த மோட் மூலம் ஒரு செல்போனுக்கு பதிலாக இனி இரண்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப் வசதி கிடைக்க உள்ளது
இதன்மூலம் உலகம் முழுக்க இனி ஒரே கணக்கை 4 டிவைஸ்களில் பெற்றுக்கொள்ள முடியும். சாட்டிங் செய்தவை
பிற சேவைகள் இந்த 4 டிவைஸ்களில் எளிதாக கிடைக்கும். பீட்டா பயன்பாட்டளர்களுக்கு மட்டுமே இந்த வசதி முதல்கட்டமாக கிடைக்கும் நிலையில் பிறருக்கு இது பயனளிக்காது. படிப்படியாக அனைத்து தரப்பினரும் இந்த சேவையை பெறுவதற்கான பணிகள் நடக்கின்றன. நீங்களும் பீட்டா பிரிவுக்கு மாற விரும்பினால் உங்கள் பிளே ஸ்டோருக்கு சென்று வாட்ஸ் ஆப்பில் கீழ் பகுதியில் வான்ட் டூ ஜாயின் பீட்டா புரோகிராம் என்பதை பதிவு செய்ய வேண்டும். அண்மையில் வாட்ஸ்ஆப் குழுவில் சேர்வோருக்கான எண்ணிக்கையை சில பீட்டா பயன்பாட்டளர்களுக்கு மட்டும் ஆயிரத்து 24 ஆக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.