இது செங்கடல் அரசியல்..
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள்(ஹவுதி) செங்கடல் வழியாக செல்லும் சரக்குக்கப்பல்களை தாக்கி வருகின்றன. இந்த பரபரப்பு காரணமாக செங்கடல் வழியாக பயணிக்க வேண்டிய இந்திய சரக்குகளை அனுப்பாமல் ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். வர்த்தக அமைச்சகம் சார்பில் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன, அதாவது இந்திய ஏற்றுமதியாளர்கள் தயக்கம் என்ன என்பது பற்றி தகவல் கசிந்திருக்கிறது. ECGC என்ற அரசு அமைப்பை பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பார்த்வால் கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகளில் தேவை அதிகரித்தால் இந்திய ஏற்றுமதிகள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செங்கடல் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் போட்டி நாடுகளுக்கு செலவு அதிகரித்துள்ளது.
ஹவுதி படையினர் தாக்குதலால் செங்கடல், மத்திய தரைக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலை இணைக்கும் கடல்வழிப்பாதை பாதிப்பை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது. மாற்றுப்பாதையில் இந்த வகை கப்பல்களை இயக்குவதால் 14 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஆவதுடன் கூடுதல் வரி, கூடுதல் காப்பீட்டுத்தொகை செலுத்தவேண்டியிருக்கிறது.
இதனிடையே ஜனவரி 17 ஆம் தேதி அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் செங்கடல் தாக்குதல் நிலையும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செங்கடல் வழியாகத்தான் 80 விழுக்காடு சரக்குகள் சென்று வருகின்றன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போக்குவரத்தும் இந்த வழியாகத்தான் நடந்து வருகின்றன. இந்த வழித்தடம் இந்தியாவின் ஏற்றுமதியில் 34%பங்களிப்பை தருகிறது. ஹவுதி படை தாக்குதல்கள் காரணமாக செங்கடல் வழியாக பயணிக்காமல் கேப் ஆஃப் குட் ஹோப் என்ற வழித்தடம் மார்க்கமாக கப்பல்கள் சுற்றி செல்கின்றன. இதனால் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கடல் மயில் தொலைவு பயணம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக 14 முதல் 20 நாட்கள் வரை பொருட்கள் கொண்டு சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது.