இது வேலையை விட்டு செல்லும் மாதம்….
பேஸ்புக் நிறுவனம் அண்மையில் அதன் பெயரை மெட்டா என மாற்றியது. இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அஜித் மோகன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தார். இவர் கடந்த 3ம் தேதியுடன் இந்திய தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் அஜித் மோகனுக்கு பதிலாக இந்தியாவின் பேஸ்புக் தலைவர் பதவியை மனீஷ் சோப்ரா என்பவர் ஏற்க உள்ளார்.அஜித் மோகன் திடீரென பதவி விலகியதால் பேஸ்புக்கில் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்னாப் என்ற சமூக வலைதளத்தின் ஆசிய பசிபிக் தலைவராக அஜித் மோகன் பதவி ஏற்க இருக்கிறார். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்கள் வணிகம், மக்கள் பயன்படுத்தி வந்த பேஸ்புக்கை நிர்வகித்ததில் அஜித்துக்கு முக்கிய பங்கு உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தெரிவித்துள்ளது. உலக அளவில் மெட்டா நிறுவனத்தில் அதிக செயலிகளை பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு முதன்மையான இடம் உள்ளது பேஸ்புக்,வாட்ஸ்ஆப்,இன்ஸ்டாகிராம் ஆகிய 3 செயலிகளையும் சேர்த்து மாதம் தோறும் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அஜித் மோகன் பதவி வகித்த காலத்தில்தான் பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் அதிக முதலீடு செய்திருந்தது. டிக்டாக்குக்கு போட்டியாக
இந்தியாவில் ரீல்ஸை அறிமுகப்படுத்தியதிலும் அஜித் மோகனின் பங்கு முக்கியமானதாகும். அவர் பணியில் இருந்தபோதுதான் மெட்டா நிறுவனத்தின் லாபம் 2019-ல் 892 கோடி ரூபாயில் இருந்து 2022ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 309 கோடியாக இரட்டிப்பானது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.