டிவிட்டர் அலுவலகத்தில் இதான் நடக்குது….
உலகளவில் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் அமரெிக்க டாலர் தொகைக்கு வாங்கிவிட்டார். எனினும் டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைவராக மஸ்க் பதவி ஏற்றது முதல் பொய்யான தகவல்களும், உறுதிபடுத்தப்படாத கட்டுக்கதைகளும் கொடிகட்டி பறந்தன. மஸ்க் ஒரு சர்வாதிகாரி போல சித்தரிக்கப்பட்டார். இது உண்மையாக இருக்குமோ என்ற அளவுக்கு அந்த நிறுவனத்தில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மஸ்க் வைத்த இலக்குகளை எட்ட பணியாளர்கள் வாரத்தின் ஏழுநாட்களும் 8 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் உழைக்க வேண்டுமாம் விடுமுறை, சம்பள உயர்வு உள்ளிட்டவை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை கடுமையாக உழைக்க மஸ்க்கின் தரப்பில் இருந்து பழைய டிவிட்டர் பணியாளர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறதாம். டிவிட்டரின் அலுவலகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு மாடியில் குடியேறியுள்ள மஸ்க்கும் அவரின் ஆதரவாளர்களும் எந்த நேரமும் வேலையை அளித்துக்கொண்டே இருப்பதாக ஊழியர்கள் புலம்புகின்றனர் எலான் மஸ்கின் வழக்கறிஞரான அலெக்ஸ் ஸ்பைரோ, மஸ்கின் தொழில்நுட்ப முதலீட்டாளர் ஜேசன்,முதலீட்டு ஆலோசகர் டேவிட் சாக்ஸ் ஆகியோர் மஸ்கின் டிவிட்டர் அலுவலகத்திற்குள் எப்போதும் டேரா அடித்துக் கொண்டுள்ளதாகவும், அவர்களை குண்டர்கள் என்றும் பழைய டிவிட்டர் ஊழியர்கள் திட்டி தீர்க்கின்றனர். மஸ்கின் குண்டர்கள் என்ற வார்த்தையை தங்கள் சகாக்களுடன் டிவிட்டர் ஊழியர்கள் பேசுவதாக தகவல் கசிந்துள்ளது. இந்த நிறுவனத்தில் கொத்துக்கொத்தாக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில்
மஸ்க் சொல்லும் வேலையை செய்து முடிக்காத பணியாளர்களை மட்டுமே நீக்க உள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.